குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் முதியவர் தர்ணா

குடிநீர் கேட்டு, புதுக் கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-23 22:57 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட் சியில் 42 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக் கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சிலர் குடிநீர் குழாயில் மின்மோட் டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் அனைவருக்கும் சமமாக குடிநீர் கிடைப் பதில்லை. இதனால் தற்போது நகராட்சி பகுதிகளில் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் புதுக் கோட்டை திருவப்பூர் சோழா ரியல் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிங்காரவேல் (வயது 71) என்பவர் காலிக் குடத்துடன் நகராட்சி அலு வலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டார். இதனால் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற் பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் ரவிச்சந் திரன் மற்றும் நகராட்சி அதி காரிகள் சிங்காரவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் எனக்கு கடந்த பல மாதங்களாக தண்ணீர் வழங்கப் படவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கு தினமும் 2 குடம் தண்ணீர் வழங்க வேண் டும் என்று கூறினார். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதையடுத்து சிங்காரவேல் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து புறப் பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்