கார் மீது லாரி மோதல், செல்போன் கடை உரிமையாளர் பலி

பழனி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் செல்போன் கடை உரிமையாளர் பலினார்.

Update: 2019-04-23 22:30 GMT
பழனி, 

பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அவருடைய மகன் பாலாஜி (வயது 33). இவர் ராஜாஜி நகரில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று காலை சொந்த வேலை காரணமாக பாலாஜி தனது காரில் வேடசந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். கணக்கன்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பாலாஜிக்கு திருமணமாகி 1½ வயதில் குழந்தை உள்ளது.

மேலும் செய்திகள்