இலங்கையில் குண்டு வெடிப்பு: குமரி கடல் பகுதியில் படகு மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, குமரி கடல் பகுதியில் படகு மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி,
இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல் போன்றவற்றில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பில் 200–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கையை ஒட்டி உள்ள தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கடல் பகுதி வழியாக குண்டு வெடிப்பு தீவிரவாதிகள்
படகு மூலம் தமிழக கடலோரப் பகுதிகளில் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளில் நேற்று அதிநவீன ரோந்து படகு மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.
கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் நீலமணி, நாகராஜன், சுடலைமணி, அனில் குமார் ஆகியோர் படகு மூலம் கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை சரி பார்த்தனர். கடலில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டு அறிந்தனர்.
இதுபோல் குளச்சல் பகுதியில் சப்–இன்ஸ்பெக்டர் ஜாண்கிங்ஸ்லி தலைமையிலான போலீசார் கடலுக்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கட்டுப்பாட்டில் சின்னமுட்டம், மகாதானபுரம், தேங்காப்பட்டணம், குளச்சல் போன்ற இடங்களில் 11 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.