இரு சக்கர வாகனங்கள் மோதல்; தச்சுத்தொழிலாளி சாவு
இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
கல்பாக்கம் அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 45). தச்சுத்தொழிலாளியான இவர் தனது கிராமத்தில் கடந்த 18-ந் தேதியன்று ஓட்டு போட்டு விட்டு வேலைக்காக பவுஞ்சூர் கிராமம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
விழுதமங்கலம்-பவுஞ்சூர் சந்திப்பில் செல்லும்போது பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் வீரராகவன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.