பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மேலும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை, தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்த பின்பு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205-ம் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை, விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.