விளாத்திகுளம் அருகே பஸ்சில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகி உறவினரிடம் ரூ.31 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
விளாத்திகுளம் அருகே பஸ்சில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகியின் உறவினரிடம் இருந்து ரூ.31 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடை செய்யும் வகையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், விளாத்திகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான விளாத்திகுளம் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரேணுகா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விளாத்திகுளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். பஸ்சில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த, விளாத்திகுளம் அருகே உள்ள குமரலிங்கபுரத்தைச் சேர்ந்த குமார் மகன் ராமராஜ் என்பவரின் துணிப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
இதனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ராமராஜை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கிடையே விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், எட்டயபுரம் அருகே குமாரகிரியில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தார். அங்கு பணத்துடன் ராமராஜை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து அந்த பள்ளிக்கூட வகுப்பறையில் பணத்தை எண்ணும் பணி நடந்தது. இதில் துணிப்பையில் ரூ.31 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டதால், அதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைக்குமாறு தாசில்தார் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.31 லட்சத்தை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ராமராஜிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார். எனவே விளாத்திகுளம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு பணத்தை கொண்டு சென்றனரா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம் அருகே பஸ்சில் அ.தி.மு.க. நிர்வாகி உறவினரிடம் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.