நடத்தையில் சந்தேகம் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-14 00:00 GMT
மும்பை,

மும்பை அந்தேரி எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நாகினா (40). இவர்களுக்கு 9 வயது மகன் உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று இரவும் வழக்கம் போல மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுரேஷ்குமார் தகராறில் ஈடுபட்டார்.

இதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியை சரமாரியாக அடித்தார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் நாகினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்