வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி மையங் களுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு, கலெக் டர் அன்பழகன் அறி வுறுத்தினார்.

Update: 2019-04-13 22:45 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்திற்கு உட் பட்ட சட்டமன்ற தொகுதி களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி அலுவலர்கள், கணினி மூலம் குலுக்கல் முறையில் முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் பணி ஒதுக் கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி, சம்பந்தப் பட்ட மண்டல அலுவலர் களால் மார்ச் 24-ந்தேதி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் நடைபெற்றது.

பின்னர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண் டாம் கட்ட கணினி முறை யிலான குலுக்கல் கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு, அவர்கள் வசிக்கும் சட்டமன்ற தொகுதியை தவிர்த்து பிற சட்டமன்ற தொகுதியில் பணிபுரிவதற் கான ஆணை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக் குச்சாவடி அலுவலர்களுக் கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 7-ந்தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 3-ம் கட்டமாக நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட வாக்குச்சாவடி அலு வலர்களுக்கு வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரி யிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட வாக்குச்சாவடி அலு வலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட வாக்குச்சாவடி அலு வலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தந்த சட்ட மன்றத்தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள் முன்னிலையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

வாக்குச்சாவடி அலுவலர் கள் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ளார்கள் என்பது குறித்த உத்தரவு வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டது.

வெண்ணமலையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்கள், வாக்குப்பதிவு தணிக்கை எந்திரம் உள்ளிட்ட எந்திரங்களை எவ்வாறு கையாளுவது? என்பதை இந்த பயிற்சி வகுப்பின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான உதவி களை செய்ய வேண்டும். அவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் வாக்களிக்க உங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும். இந்த பயிற்சி மையங்களில் அமைக் கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை அனைவரும் பார்த்து உங்கள் பணி குறித்து மேலும் அறிந்து கொள்ளலாம், என்றார்.

அப்போது, கரூர் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சரவண மூர்த்தி, வட்டாட்சியர் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்