இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அழகியமண்டபம்,
இரணியல் அருகே காரங்காடு நுள்ளிவிளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் அஜிஷா (வயது 13). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, ஆண்டு இறுதி தேர்வு நடந்தது. அஜிஷா நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதி விட்டு மாலையில் வீட்டுக்கு வந்த மாணவி விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வேலைக்கு சென்ற தாயார் இரவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் அஜிஷாவை காணவில்லை. தொடர்ந்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தேடிய போது, அங்கு அஜிஷா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜிஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த அஜிஷாவுக்கு ஒரு அண்ணனும், ஒரு தங்கையும் உள்ளனர். 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.