தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் இல.கணேசன் எம்.பி. பேட்டி
தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நேற்று நாகர்கோவில் உள்பட பல இடங்களில் இல.கணேசன் எம்.பி. திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உடன் இருந்தார்.
முன்னதாக இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து தொகுதியிலும் வெற்றி
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்து இருக்கிறார். இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாவட்டத்தின் நலனுக்காக கடினமாகவும், பொறுப்புடனும் பொன்.ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், தீவிரவாதத்தை அழிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தீவிரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.விரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள், பா.ம.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.