நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை கலெக்டர் தகவல்
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் அதனை சார்ந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 18-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணும் நாளான அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.
உரிமம் ரத்து
இந்த நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உரிமத்தினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.