விளாத்திகுளம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்குசேகரிப்பு
விளாத்திகுளம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் வாக்குசேகரித்தார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் விளாத்திகுளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு விளாத்திகுளம் அருகே உள்ள அய்யனார்புரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அவர் துளசிபட்டி, கோட்டநத்தம், ஜமீன்செங்கல்படை, ஜெகவீரபுரம், மீனாட்சிபுரம், குமாரபுரம், அயன்செங்கல்படை, மந்திகுளம், மார்த்தாண்டம்பட்டி, வடமலைசமுத்திரம், பூசனூர், எம்.அரசன்குளம், புளியங்குளம், பொட்டலூர், கெச்சிலாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மதியம் 1.30 மணிக்கு ராமசந்திராபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு உள்ள குழந்தைகள் நலனுக்காக அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அந்த பகுதி விவசாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து அவர் ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், ஊசிமேசியாபுரம், கூத்தலூரணி, கந்தசாமிபுரம், வள்ளிநாயகபுரம், வெங்கடேசுவரபுரம், டி.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், சக்கம்மாள்புரம், பொம்மையாபுரம், சிவஞானபுரம், ஏ.லட்சுமிபுரம். பி.சண்முகபுரம், பி.ஜெகவீரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவருடன் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சேதுராஜ், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கசாமி, புதிய தமிழகம் நிர்வாகிகள் உமையாணன், பெத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.