தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்,
தேனி மாவட்டம் போடி-தேனி சாலையில் கோடாங்கிபட்டி அருகே நேற்று முன்தினம், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் மீது அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தேனி கோட்டைக்களம் தெருவை சேர்ந்த வெற்றியரசன் (வயது 50), அவருடைய அண்ணன் சிற்றரசன் (55) உள்பட 6 பேர் பலி யானார்கள்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருப்பூர் மாவட்டம் சிக்கனூரை சேர்ந்த சொர்ணம் (60) உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனியார் பஸ்கள் அதிவேகமாக சென்றதாலேயே இரு விபத்துகளும் ஏற்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனியார் பஸ் டிரைவர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி சாலை விபத்து குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார், வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தனியார் பஸ் டிரைவர்கள் கலந்துகொண்டனர். அதையடுத்து போலீசார், தனியார் பஸ் டிரைவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசினர்.
அப்போது, டிரைவர்கள் அதிவேகமாக பஸ்களை ஓட்டக்கூடாது. குறுகிய சாலை, வளைவான சாலைகளில் வாகனங்களை முந்திச்செல்ல முயலக்கூடாது. பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் பயணிகளை இறக்கி, ஏற்றிச்செல்லக்கூடாது. படிக்கட்டுகள், பஸ்களின் பின்புறம் உள்ள ஏணி ஆகியவற்றில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நடைமுறைகளை டிரைவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதனை மீறி மீண்டும் அதிவேகமாக பஸ்களை ஓட்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப் படும் என்றனர்.