கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த கன்டெய்னர் லாரியில் பணமா? பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

கேரளாவில் இருந்து கோவைக்கு வந்த கன்டெய்னர் லாரியில் பணம் இருக்கலாம் என்று தகவல் பரவியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-08 22:45 GMT

கோவை,

கேரளாவில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் ஒரு கன்டெய்னர் லாரி கோவை நோக்கி வேகமாக வந்தது. அந்த லாரி குனியமுத்தூர் பகுதியில் தாறுமாறாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் லாரியை விரட்டி வந்தனர். ஆத்துப்பாலம் சுங்க சாவடி அருகே வந்தபோது கன்டெய்னர் லாரி சிறைபிடிக்கப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் கொண்டு வந்து இருக்கலாம் என்றும், அதனால் தான் அந்த கன்டெய்னர் லாரி வேகமாக வந்தது என்றும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினர் அங்கு வந்தனர். விசாரணையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டீத்தூள் ஏற்றி வருவதாக கன்டெய்னர் லாரி டிரைவர் கூறினார். ஆனால் அதில் பணம் இருக்கலாம் என்று தகவல் பரவியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கன்டெய்னர் லாரியை திறந்து பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள். ஆனால் சீல் வைக்கப்பட்டிருந்ததால் அதை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. டீத்தூள் ஏற்றி வந்ததற்கான ஆவணங்களை தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் போலீசார் மற்றும் அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்று தடியடி நடத்தி பொதுமக்கள் கூட்டத்தை கலைத்தனர்.

மேலும் செய்திகள்