சத்தியமங்கலம் அருகே வேன் மோதி என்ஜினீயர் பரிதாப சாவு

சத்தியமங்கலம் அருகே வேன் மோதி என்ஜினீயர் இறந்தார்.

Update: 2019-04-08 22:30 GMT

சத்தி­யமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மகன் கோபிநாத் (வயது 22). என்ஜினீயர். இன்னும் திருமணம் ஆகாதவர். கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை கோபிநாத் தன்னுடைய வீட்டில் இருந்து கோவைக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். சத்தி செண்பகபதூர் பவர் ஹவுஸ் அருகே பெரியூர் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே திருப்பூரில் செயல்படும் ஒரு தனியார் கம்பெனியின் வேன் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்தவிபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கோபிநாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் அங்கு விரைந்து சென்று, கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.

இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோபிநாத்தின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்