தஞ்சை அருகே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர், பள்ளத்தில் கவிழ்ந்தது டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

தஞ்சை அருகே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-04-07 22:45 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு பயன்படும் கரும்புகளை பயிர் செய்து இருந்தார். இந்த கரும்புகளை அறுவடை செய்து நேற்றுமுன்தினம் இரவு கருணாகரன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி குருங்குளத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்தார்.

ஒரத்தநாடு-வல்லம் சாலையில் மருங்குளம் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி டிராக்டருக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.

இதனால் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிச்சென்ற டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

மேலும் டிராக்டரில் இருந்த கரும்புகள் சேதம் அடைந்தன. பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் பொக்லின் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்கள் மூலமாக நேற்று காலை மீட்கப்பட்டது. 

மேலும் செய்திகள்