கடலூர், குறிஞ்சிப்பாடியில் வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு

கடலூர், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

Update: 2019-04-07 22:30 GMT
கடலூர், 

கடலூர் ஊராட்சி ஒன்றியம் தாழங்குடா, குண்டு உப்பலவாடி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, பச்சையாங்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சங்கொலிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம், அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங் களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்புசெல்வன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். மாவட்டதில் 100 சதவீதம் வாக்குப்பதிவாக வாக்குச்சாவடியில் குடிநீர், கழிவறை வசதி, ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம், சக்கர நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாழங்குடா ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, குண்டு உப்பலவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சோனங்குப்பம் குழந்தைகள் மையம், சிங்காரத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி, பச்சையாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சொத்திக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராசாப்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளி, சங்கொலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் பூவாணிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக் டர் சரயூ, உதவி தேர்தல் அலுவலர் (குறிஞ்சிப்பாடி)ஜெயகுமார், கடலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அரவிந்த் ஜோதி, உதவி இயக்குனர் (மீன்வளம்) ரம்யலட்சுமி, கடலூர் தாசில்தார் செல்வ குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்