சூளகிரி அருகே வேன் கவிழ்ந்து விவசாயி சாவு

சூளகிரி அருகே வேன் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-04-07 22:15 GMT
சூளகிரி, 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டேகுப்பம் பக்கமுள்ள அனுமந்தன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 36). விவசாயி. சம்பவத்தன்று இவர் வேன் ஒன்றில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டிருந்தார். வேனை சாந்தம்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி (26) ஓட்டிச் சென்றார்.

சூளகிரி அருகே குருபராத்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த நாராயணன், வேன் டிரைவர் சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனாலும் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் விவசாயி நாராயணன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் சின்னசாமி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலையில் வேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்