நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வாக்குறுதி
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் வாக்குறுதி அளித்தார்.
நாங்குநேரி,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று நாங்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பிநகர், மறுகால்குறிச்சி, முதலைகுளம், மாயனேரி, தென்னிமலை, இளையார்குளம், பிள்ளைகுளம், பூலம், மருதகுளம், கோவைகுளம், பருத்திப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
பிரசார நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் கிரகாம்பெல், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, நகர செயலாளர் வானமாமலை, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சிவனேஷ், ராஜேஷ், சக்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மருதகுளம் முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஜெயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று நாங்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பிநகர், மறுகால்குறிச்சி, முதலைகுளம், மாயனேரி, தென்னிமலை, இளையார்குளம், பிள்ளைகுளம், பூலம், மருதகுளம், கோவைகுளம், பருத்திப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
நாங்குநேரியில் வேட்பாளர் ஞானதிரவியம் பேசுகையில், “நாங்குநேரி ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன். நாங்குநேரி ஊருக்குள் வராமல் பைபாஸ் வழியாக பஸ்கள் செல்லும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொய்வில் இருக்கும் பணிகளை துரிதப்படுத்துவேன். அதன்மூலம் அதிகமான தொழில் நிறுவனங்களை அமைத்து வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காண்பேன்“ என்றார்.