திருவாரூரில் பாலிடெக்னிக், விவசாய கல்லூரி அமைக்கப்படும் அமைச்சர் காமராஜ் உறுதி
திருவாரூரில் பாலிடெக்னிக், விவசாய கல்லூரி அமைக்கப்படும் என்று, அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை.ம.சரவணன் ஆகியோரை ஆதரித்து திருவாரூர் ஒன்றியம் அடியக்கமங்கலம், சேமங்கலம், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் இரா.காமராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:–
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நலத்திட்ட பணிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. திருவாரூர் நகராட்சியில் கொடிக்கால்பாளையம், அலிவலம், திருவாதிரைமங்கலம் பள்ளிகளில் ரூ.4.43 கோடியில் வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ராதாநல்லூர், பின்னவாசல், முசிரியம் ஆகிய இடங்களில் ரூ.12 கோடியில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாலிடெக்னிக் மற்றும் விவசாய கல்லூரி அமைக்கப்படும். திருவாரூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருவது போல இவர்களின் குழந்தைகளின் கல்வி நலனும் காக்கப்படும். இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்.