விழுப்புரம் அருகே உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுப்பு இறைச்சி கடைக்காரர் கைது

விழுப்புரம் அருகே உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுத்த இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-04-06 23:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் பிரகாஷ் (வயது 32). இவர், அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண்ணும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரகாஷ், அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண், பிரகாசிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதோடு பிரகாஷ், விக்கிரவாண்டி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவரது பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்ததும் பாதிக்கப்பட்ட பெண், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்