பரமக்குடி அருகே அனுமதியின்றி ஒலிபெருக்கி, கட்சிக்கொடி கட்டியவர்கள் மீது வழக்கு
பரமக்குடி அருகே அனுமதியின்றி கொடி, ஒலிபெருக்கி கட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
பரமக்குடி,
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பரமக்குடி அருகே உள்ள சுப்பராயபுரம் கிராமத்தில் உள்ள நாடக மேடையில் அனுமதியின்றி அ.தி.மு.க. கொடி கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அ.தி.மு.க. கிளை செயலாளர் நாராயணன் மீதும், வேந்தோணி தொட்டிச்சியம்மன் காலனியில் அனுமதியின்றி ஒலிபெருக்கி மற்றும் கட்சி கொடி கட்டியதாக அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து, யாசர் அராபத்ஆகியோர் மீதும் தேர்தல் அதிகாரி புகார்கொடுத்தார்.
இதேபோல குமரக்குடி கிராமத்தில் நாடக மேடையில் அனுமதியின்றி கட்சி கொடிகட்டி இருந்ததாக அந்த ஊரைச்சேர்ந்த ரெங்கராஜ் மீதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பானுமதி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.