ஊத்தங்கரை அருகே பரபரப்பு பெண் கழுத்தை அறுத்து கொலை நடத்தையில் சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்

ஊத்தங்கரை அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

Update: 2019-04-05 22:45 GMT
ஊத்தங்கரை, 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு காமாட்சி சென்றார். இதைத்தொடர்ந்து கணவருடன் சேர்ந்து வாழலாம் என நினைத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேத்துநாயக்கன்பட்டிக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் காமாட்சி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து காமாட்சியின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த காமாட்சி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ரவி தனது மனைவியை கொலை செய்த கத்தியுடன் சிங்காரபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் அவரை கொலை செய்ததாக ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் ஊத்தங்கரை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்