தா.பேட்டையை வளர்ச்சி பகுதியாக மாற்ற பாடுபடுவேன் தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் வாக்குறுதி

தா.பேட்டையை வளர்ச்சி பகுதியாக மாற்ற பாடுபடுவேன் என்று தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

Update: 2019-04-04 22:45 GMT
தா.பேட்டை,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றிய பகுதி கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு நேற்று பிரசாரம் செய்தார்.

பாப்பாப்பட்டி கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து பூலாஞ்சேரி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, ஜம்புமடை, மகாதேவி, வேலம்பட்டி, இலுப்பூர், பிள்ளாபாளையம், அமராவதி சாலை, மேட்டுப்பாளையம், கரிகாலி, ஊருடையாப்பட்டி, தா.பேட்டை, காருகுடி, உள்பட பல்வேறு கிராமங்களில் ஆதரவு திரட்டினர்.

வளர்ச்சி பகுதியாக மாற்றுவேன்

பாப்பாப்பட்டி கிராமத்தில் அவர் பேசியதாவது:-

தா.பேட்டை ஒன்றியம், வறட்சியான பகுதி. நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். நான் வெற்றி பெற்றால், வறட்சியாக உள்ள இந்த பகுதியை கூடுதல் நிதி பெற்று வளர்ச்சிமிக்க பகுதியாக மாற்ற பாடுபடுவேன். மேலும், இப்பகுதியில் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு அமைக்கவும், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலை அமைத்திடவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் சேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். 

மேலும் செய்திகள்