பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய ஆசிரியர்களுக்கு பயிற்சி

2019-20-ம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான களஆய்வு செய்வது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

Update: 2019-04-03 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மூலம் 2019-20-ம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிவதற்கான களஆய்வு செய்வது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்டஅலுவலர் ராஜா தலைமை தாங்கினார்.வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் சங்கர், மற்றும் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி வரவேற்று பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பேசும்போது, 100 சதவீதம் சிறப்பான முறையில் இந்த கள ஆய்வு நடத்த வேண்டும் என்றார். பயிற்சியின் போது, அரசாணை எண்:10 மற்றும் மாணவர்களை கண்டறியும் விதம், மக்கள் தொகை கணக்கீடு புதுப்பித்தல், 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைககளையும், 18 வயது வரை அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகள்மற்றும் குழந்தைத்தொழிலாளர்கள் கண்டறிவது குறித்த விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் தாமோதரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்