ஆயத்த ஆடை நிறுவன ஊழியரை கழுத்தை அறுத்து கொன்றவர் கைது திருடியதாக கூறியதால் ஆத்திரம்

ஆயத்த ஆடை நிறுவனத்தில் திருடியதாக குற்றம் சுமத்திய சக ஊழியரை கழுத்தை அறுத்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-03 23:00 GMT
மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் குர்பான் கான் (வயது22). இவர் சம்பவத்தன்று இரவு ஜோகேஸ்வரி- விக்ரோலி லிங்க் ரோடு பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மெட்ரோ ரெயில் வழித்தட கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே ஆயத்த ஆடை நிறுவனத்தில் குர்பான் கானுடன் பணிபுரிந்து வந்த கோரேகாவை சேர்ந்த சல்மான்கான் (22) என்ற ஊழியர் தான் அவரை கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாராவியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சல்மான் கானை அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந் ததாவது, அந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் அண்மையில் ஒரு பொருள் திருட்டு போயிருக்கிறது. இந்த திருட்டில் சல்மான்கானுக்கு தொடர்பு இருப்பதாக குர்பான்கான் அவர் மீது சந்தேகம் எழுப்பி குற்றம் சுமத்தி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த சல்மான்கான் அவரை கொலை செய்துள்ளார்.

மேலும் செய்திகள்