வானவில் : பவர் பேங்குடன் வை- பை ரவுட்டர்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்கைரோம் நிறுவனம்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸ்கைரோம் நிறுவனம் பவர் பேங்குடன் கூடிய வை-பை ரவுட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இது 4 ஜி.எல்.டி.இ. ஹாட் ஸ்பாட்டாகும்.
இப்போதெல்லாம் வீடுகளில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனரோ அனைவருக்கும் தனித்தனி ஸ்மார்ட்போன்கள் உள்ளன. வெளியூர் பயணத்தின்போது வை-பை இணைப்பு அனைத்து இடங்களிலும் கிடைக்குமா என்பது சந்தேகம். அத்தகைய சூழலில் உங்களுக்கு இந்த வை-பை ரவுட்டர் உதவும். நீங்கள் காணும் காட்சிகளை ஸ்மார்ட்போனில் பதிவு செய்து அதை உடனடியாக உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அப்படியே அப்லோட் செய்ய முடியும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் குறைந்துவிட்டால் இதை பவர் பேங்காகவும் பயன்படுத்தலாம். இதில் 6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் உங்கள் கேமரா, டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களையும் சார்ஜ் செய்யலாம்.
பயணங்கள் இனிமையாக இதுபோன்ற நவீன சாதனங்களும் அவசியம்தானே. இதன் விலை சுமார் ரூ.10,200. இதில் உள்ள பேட்டரி 16 மணி நேரம் நீடித்திருக்கும். கையடக்கமாக இருப்பதால் இதை எடுத்துச் செல்வதும் எளிது. இந்தியாவில் அமேசான் இணையதளம் மூலம் இதை வாங்கலாம்.