தொடர்ந்து சிலர் தான் பதவியில் நீடிக்க வேண்டுமா? காங்கிரசில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கேள்வி
தொடர்ந்து சிலர் தான் பதவியில் நீடிக்க வேண்டுமா? காங்கிரசில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? என்று ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி,
புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நன்கு படித்த இளைஞரை டெல்லிக்கு அனுப்பி வைக்கும் எண்ணத்தோடு வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் எங்கள் கட்சியின் எண்ணம். இளைஞரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருமை நமது புதுச்சேரிக்கு வரவேண்டும்.
புதுவையின் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர் என்ற பெருமை வைத்திலிங்கத்துக்கு இருக்கலாம். அவரை விட அதிக பெருமை வாய்ந்தவர்தான் முதல்-அமைச்சர் நாராயணசாமி. அவருக்கு நாடாளுமன்ற அனுபவமும் அதிகம். அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கத்தை நிறுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் எத்தனையோ இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். அவர்களுக்கு கூட சீட் கொடுத்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஒரு சிலர்தான் பதவியில் இருக்கவேண்டுமா?
நமது முதல்-அமைச்சர் எத்தனையோ ஆண்டுகள் மத்திய மந்திரியாகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார். அவர் புதுவை மாநிலத்துக்கு கொண்டு வந்த திட்டம்தான் என்ன? அவர் முதல்-அமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் ஆன போதும் எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியில் வந்து வெற்றிபெற்ற அவர், இந்த தொகுதிக்காவது ஏதாவது செய்தாரா?
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது எனது தொகுதியை சேர்ந்தவர்களுக்குத்தான் வேலை கொடுத்தேன் என்றார். அவர் முதல்-அமைச்சரானபின் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்? எனது ஆட்சிக்காலத்தில் தகுதியின் அடிப்படையில் அனைவருக்கும் வேலை தந்தேன். யாருடைய பரிந்துரையும் இல்லாமல் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நீங்கள் உங்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள்?
இந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய தொழிற்சாலைகள் வரவில்லை. இருக்கும் தொழிற்சாலைகளும் மூடப்படுகின்றன. நான் முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் நிறைய கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஆனால் தொழில் தொடங்குவதற்கான சூழலே இந்த ஆட்சியில் இல்லை. தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதி தருவதற்கே இழுத்தடிக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் கவர்னரையும், எதிர்க்கட்சியினரையும் குறை கூறுகிறார்கள். கவர்னருக்கு என்ன அதிகாரம் என்பதை அறிந்தவர்தான் நமது முதல்-அமைச்சர். நமக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி இணக்கமாக சென்று திட்டங்களை செயல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. உங்கள் சாதனை என்று எதையாவது ஒன்றை சொல்ல முடியுமா?
நலிவடைந்த அரசு சார்பு நிறுவனங்கள் தொடர்பாக அரசு செயலாளர் ஒருவரிடம் அறிக்கை வாங்கி மூட திட்டமிட்டுள்ளனர். இப்போது லாட்டரி சீட்டு கொண்டுவர போகிறோம் என்கிறார்கள். லாட்டரி சீட்டு கொண்டு வருவது ஒரு திட்டமா? இதனால் எத்தனை குடும்பங்கள் பாழ்பட்டுள்ளது என்று தெரியுமா? யாருக்கு இந்த லாட்டரியை கொண்டு வருகிறீர்கள்? கப்பலை கொண்டுவந்து சீட்டாட்டம், நடனம் நடத்தபோகிறார்களாம். ஒட்டுமொத்த குடும்பங்களையும் பாழ்படுத்தும் திட்டங்கள் இவை. இவர்கள் அரசாங்கத்தையே வியாபாரம் ஆக்கிவிட்டனர்.
மக்கள் இந்த ஆட்சி எப்போது மாறும் என்று எங்களை பார்த்து கேட்கிறார்கள். ஆட்சி மாற்றத்தையும் விரும்புகிறார்கள். ஆட்சிமாற்றம் பற்றி பேசுபவர்களை ஜெயிலில் பிடித்து போட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களை உங்களால் ஜெயிலில் பிடித்து போடமுடியுமா?
மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி வரும். கடந்த 2011-ல் நமது ஆட்சி வந்ததுபோல் மீண்டும் 2021-ல் ஆட்சியை பிடிப்போம். நாம் ஆட்சிக்கு வந்ததும் மாநில அந்தஸ்து கிடைக்கும். இப்போது செய்தித்தாள்களில் கருத்து கணிப்புகள் வருகின்றன. அதை பார்க்கும்போது ராகுல்காந்தி எங்கே பிரதமராக வருவது? மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சிதான் அமையும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.