குடிமங்கலம் அருகே குடியிருக்க இடவசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
திருப்பூர் மாவட்டம் வேலாயுதகவுண்டன்புதூரை சேர்ந்த ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி வேலாயுதகவுண்டன்புதூரை சேர்ந்த ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், நாங்கள் அனைவரும் ஏழை கூலித்தொழிலாளர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 52 வீடுகள் இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் பெருகி விட்டதால் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் 3–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வசிக்க வேண்டியுள்ளது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே எங்களுக்கு குடியிருக்க இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.