வந்தவாசி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் பறிமுதல் பறக்கும்படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம்.எந்திரத்தில் நிரப்புவதற்காக எடுத்துச் சென்ற ரூ.9 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் அதனை பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி,
அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மினிவேனில் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சியை சேர்ந்த லோகேஷ் என்பவர் ரூ.24 லட்சம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லோகேஷிடம் நிலை கண்காணிப்புக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தெள்ளார் மற்றும் வெள்ளிமேடு பேட்டையில் உள்ள ஏ.டி.எம்.எந்திரங்களில் பணத்தை நிரப்புவதற்காக ரூ.24 லட்சத்தை எடுத்துச்சென்றதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணத்தை நிரப்ப முடியாததால் வெள்ளிமேடுபேட்டை ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை நிரப்ப அதனை எடுத்துச்செல்வதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.
அவர் காட்டிய ஆவணங்களை நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அதில் ரூ.15 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள ரூ.9 லட்சத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அரிக்குமார் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் செங்கத்தை அடுத்த கண்ணக்குறுக்கை பஸ் நிறுத்தம் அருகே அன்பழகன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனை செய்ததில் வெங்கடேசன் (வயது 48) என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 50-ஐ பறிமுதல் செய்து செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர். பின்பு அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அலுவலர் துளசிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தலைமையில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெள்ளார் அருகே கொடியாலம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.