செந்துறை பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் சந்திரசேகர் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். இதில் செந்துறை ஒன்றிய எல்லையான கட்டையன்குடிக்காடு வந்த சந்திரசேகருக்கு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரசார வாகனத்தில் ஏறிய சந்திரசேகர் முதலில் செந்துறை காலனி தெருவில் பிரசாரம் செய்தார்.
அப்போது அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திர எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முள்ளுக் குறிச்சி சுரேஷ், பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் வைத்தி, பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் காமராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.