தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் ஜி.கே.வாசன் பேச்சு
தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரசாரம் செய்தார். பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாகும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும் சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழகத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினருடன் அமர்ந்து ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். கேரளாவில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எப்படியாவது தோற்கடிக்கப்போவதாக அம்மாநில கம்யூனிஸ்டு கட்சியினர் பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பவாத கூட்டணியினர் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாறவும் மாட்டார்கள்.
தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள், வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மையினர் நலன் குறித்து பேசுகிறார்கள். ஆனால் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றதேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட சிறுபான்மையினர் ஒருவருக்கு கூட சீட் வழங்கவில்லை. தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவும், 100 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றால் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள். முதல்- அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் இருவரையும் நாம் எளிமையாக அணுகமுடியும். உங்களுக்கான நலத்திட்டங்களை கேட்டுப்பெற்றுத் தரும் வல்லமை மிக்க வேட்பாளர் சிவபதிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச்செயலாளர் வைத்தி, த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.