ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் ரூ.6¾ லட்சம் பறிமுதல்
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் ரூ.6¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலகால் கிராமத்தில் வானதிரையன் பட்டினம் சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானதிரையன் பட்டினத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 860 எடுத்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் அதனை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் மீன்சுருட்டி அருகே உள்ள குறுக்கு சாலையில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த வேளாண்மை அலுவலர் சுப்ரமணியன் தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை மாவட்டம், குத்தாலத்தை சேர்ந்த சவுகத்அலி என்கிற கோழி வியாபாரி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். மேலும் துணை தாசில்தார் வேலுமணி தலைமையிலான போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த மணக்கரை கோவிந்தராஜிடம் இருந்து ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல மீன்சுருட்டி அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மினி லாரியை சோதனை செய்ததில் சின்னமனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.92 ஆயிரத்து 200 பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணங்கள் அனைத்தும் ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.