புவியியல் ஆராய்ச்சியாளர் தேர்வு
புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியல் நிபுணர் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., அரசின் பல்வேறு உயர்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கிறது. தற்போது மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான, ‘ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்’ ஒருங்கிணைந்த தேர்வு-2019 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மூலம் 106 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு 50 இடங்களும், ஜியோபிசிக்ஸ்ட் பணிக்கு 14 இடங்களும், கெமிஸ்ட் பணிக்கு 15 இடங்களும், ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் பணிக்கு 27 இடங்களும் உள்ளன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் இவை சார்ந்த முதுநிலை பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
கட்டணம்
விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஜூன் 28-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.