காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

கோவில்பட்டியில் காணொலி காட்சி மூலம் நடந்த பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2019-03-31 21:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் காணொலி காட்சி மூலம் நடந்த பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காணொலியில் கலந்துரையாடல்

அகில இந்திய அளவில் காணொலி மூலம் நானும் ஒரு காவல்காரன் என்ற தலைப்பில் நேற்று மாலையில் பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியினரிடம் கலந்துரையாடினார். இதில் மாநிலத்துக்கு ஒரு தொகுதியில் இருந்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் விழுப்புரம் தொகுதி தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தது. மாலை 5 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிகழ்ச்சி முடிவடைந்தது.

தூத்துக்குடியில் இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, தகவல் தொழிற்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜீவா கண்ணன், திரைப்பட இயக்குனர் பவித்ரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாரிசெல்வன், இளைஞர் அணி நகர தலைவர் காளிராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்