தண்ணீர் குறைந்தநிலையில் புழல் ஏரியில் கீரை, காய்கறி விவசாயம்
தண்ணீர் குறைந்த நிலையில் புழல் ஏரியில் கீரை மற்றும் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரியில் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் புழல் ஏரியில் தற்போது சொற்ப அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரியின் பல்வேறு பகுதிகள் வறண்டு காணப்படுகிறது.
இதனால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கீரை, காய்கறி போன்ற தோட்டப்பயிர்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பல கீரை வகைகளும், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான தண்ணீர், ஏரியில் இருந்து மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர ஏரியில் வெகு தூரத்தில் காணப்படும் தண்ணீரை எடுத்து வர முடியாத நிலை இருந்தால், ஏரியின் நடுவில் பெரிய அளவில் குட்டை தோண்டப்பட்டு, அதில் கிடைக்கும் தண்ணீர் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரியின் ஒரு பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட கீரைகள் 25 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து சென்னை தியாகராய நகர் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அறுவடை முடிந்த பகுதிகளில் மீண்டும் கீரை, காய்கறிகள் பயிர் செய்வதற்காக டிராக்டர் மூலம் நிலத்தை பண்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணியில் ஏரியின் பின்பகுதியை சேர்ந்த பம்மத்துகுளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதிகளின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிப்பவர்கள் ஈடுபடுவதாக கூறப் படுகிறது.
இதுகுறித்து விவசாயம் செய்து வருபவர்கள் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் ஏரியில் தண்ணீர் குறையும் போது, ஏரியின் உட்பகுதியில் தோட்டப்பயிர் விவசாயம் செய்யும் பணியை தலைமுறை தலைமுறையாக செய்து வருகிறோம். தற்போது ஒன்றும் புதிதாக செய்யவில்லை. விவசாயத்துக்கு தேவைப்படும் தண்ணீரை ஏரியில் இருந்து தான் எடுத்து வருகிறோம். இதனை நம்பி நூற்றுக்கணக் கான குடும்பத்தினர் உள்ளனர்’ என்றனர்.