தானேயில் ரூ.15¾ லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது

தானேயில் ரூ.15 லட்சத்து 76 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-30 22:50 GMT
தானே,

தானேயில் ரூ.15 லட்சத்து 76 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளநோட்டுகள் பறிமுதல்

தானே மும்ரா கிஸ்மத் காலனியில் சிலர் கள்ளநோட்டுகளுடன் வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அதிகாலை 4.40 மணியளவில் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த அந்த பையில் சோதனை போட்டனர்.

இந்த சோதனையில் அந்த பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.15 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் கள்ளநோட்டுகள் வைத்திருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களான ஜான்குமார் சுன்னாலால் (வயது41), முகமது தில்சத் சராஜூதீன் (26) மற்றும் மும்ராவை சேர்ந்த ஜாவேத் அகமது அன்சாரி (30) என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மேற்குவங்கத்தில் இருந்து அச்சடித்து கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்