அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

செல்லூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-30 22:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதி கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாகவும் கிராம மக்கள் நோட்டீசு மூலம் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்