காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.84 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
புதுக்கோட்டை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.84 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை,
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண் காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண் காணிப்பு குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்த வழியாக செல்லும் அனைத்து கார்கள் உள்ளிட்ட வாகனங்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள கீழப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே கூட்டுறவு சார்பதிவாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை ராம்நகரை சேர்ந்த செல்வராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.83 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.83 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தாசில்தார் பரணி முன்னிலையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் புதுக்கோட்டை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.