திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,698 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1,698 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2019-03-30 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்த அறைக்கு சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சந்திரகாந்த் டெங்க், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 274 வாக்குச்சாவடி மையங்களுக்கு 316 வாக்குப்பதிவு எந்திரங்களும், 316 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 340 வாக்களித்த வாக்காளர்கள் தணிக்கை சோதனை எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 283 வாக்குச்சாவடி மையங் களுக்கு 326 வாக்குப்பதிவு எந்திரங்களும், 326 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 351 வாக்களித்த வாக்காளர்கள் தணிக்கை சோதனை எந்திரங்களும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 350 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 377 வாக்களித்த வாக்காளர்கள் தணிக்கை சோதனை எந்திரங்களும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 309 வாக்குச்சாவடி மையங்களுக்கு 356 வாக்குப்பதிவு எந்திரங்களும், 356 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 384 வாக்களித்த வாக்காளர்கள் தணிக்கை சோதனை எந்திரங்களும்் அனுப்பி வைக்கபட்டன.

மேலும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மைங்களுக்கு 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 350 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 377 வாக்களித்த வாக்காளர்கள் தணிக்கை சோதனை எந்திரங்களும் அனுப்பி வைக்கபட்டன. நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 1,698 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் முதல் நாளில் அந்த வாக்குச்சாவடி மைங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

மேலும் செய்திகள்