சயான் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆய்வு
சயான் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
சயான் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இடிந்து விழுந்தது
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகில் இருந்த நடைமேம்பாலம் சமீபத்தில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மும்பை சயான் மேம்பாலத்தில் சிறிய பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். அவர் பாலம் இடிந்த பகுதியில் ஆய்வு செய்தார். இதையடுத்து போலீசார் மற்றும் மாநில சாலை மேம்பாட்டு கழக அதிகாரிகளும் அங்கு வந்தனர். உடனடியாக மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
சீரமைப்பு பணி
இந்தநிலையில் மாநில சாலை மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிறிய பகுதி இடிந்து விழுந்த சயான் மேம்பாலத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி முதல் 2 மாதங்களுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. பணியின் போது மேம்பாலத்தில் உள்ள 170 இணைப்பு இரும்பு தாங்கிகள் மாற்றப்படும்.
பணி நடைபெறும் நேரத்தில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். மேலும் வாகனங்கள் பாலத்துக்கு கீழ் உள்ளசாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.