தாளவாடி மலைப்பகுதியில் கடும் வறட்சியால் விவசாய பணிகள் பாதிப்பு அணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
தாளவாடி மலைப்பகுதியில் கடும் வறட்சியால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி,
தமிழக- கர்நாடக எல்லையில் அமைந்து உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இது கடல் மட்டத்தில் இருந்து 1,050 மீட்டர் உயரத்தில் உள்ளது. விவசாயத்துக்கு பெயர்போன தாளவாடியில் தற்போது கடும் வறட்சி தாண்டவமாடுகிறது.
தாளவாடிக்கு உள்பட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழில். மேலும் ஆடு, மாடுகளும் மேய்த்து வருகிறார்கள். நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தாளவாடி மலைப்பகுதியில் ஆற்றுநீர் பாசனம் கிடையாது. மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகள் நடைபெறும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. 300 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது 1,400 அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் இருப்பதில்லை.
இதனால் தாளவாடி மலைப்பகுதியில் வறட்சி தாண்டவமாடுகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியவில்லை. மேலும் தென்னை மரங்களும் கருகி வருகின்றன. இதேபோல் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஆடு, மாடுகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தாளவாடி மலைப்பகுதி முழுவதும் ஆழ்குழாய் கிணறு மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தோம். ஆனால் தற்போது ஏற்பட்டு உள்ள கடும் வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணற்றில் நீர் வற்ற தொடங்கி விட்டதால் 1,000 ஏக்கர் பரப்பளவு மட்டுமே விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மற்ற நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.
இதில், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் தாளவாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மழைநீரை சேமிக்க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தடுப்பணைகள் போதுமானதாக இல்லை. மேலும் தடுப்பணைகளின் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் போதிய அளவு மழைநீர் தேங்குவது இல்லை.
அதுமட்டுமின்றி மழைநீர் அனைத்தும் காட்டாறு வழியாக கர்நாடக மாநிலம் சிக்கொலா மற்றும் சொர்ணாவதி அணைக்கு செல்கிறது. தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒருசில தடுப்பணைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மழைநீரை சேமிக்க கூடுதலாக தடுப்பணைகள் கட்டுவதோடு, அதனை உயரமாகவும் அமைக்க வேண்டும்.
தாளவாடி அருகே உள்ள மரூர், சிக்கள்ளி, மரியபுரம், திகனாரையை ஒட்டிய வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீரை சேமிக்கும் வகையில் அணை கட்டப்பட்டால் விவசாயம் செழிக்கும். மேலும் வனவிலங்குகளும் கிராமப்பகுதிக்குள் புகுவதை தடுக்கலாம். அதனால் அணை கட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.