என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. புதுச்சேரி மாநில அந்தஸ்துபெற எந்த முயற்சியும் செய்யவில்லை நாராயணசாமி குற்றச்சாட்டு
என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. புதுச்சேரி மாநில அந்தஸ்துபெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
காரைக்கால்,
காரைக்காலில் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். தற்போது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நிற்கும் வைத்திலிங்கம் 8 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். முதல்-அமைச்சர், அமைச்சர், சபாநாயகர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். மக்கள் சேவை என்றால் என்ன என்பதை நன்கு அறிந்தவர். ரங்கசாமி நிறுத்தியுள்ள வேட்பாளர், பணம் உள்ள ஒரு டாக்டர். அதை தவிர வேறு தகுதி அவருக்கு இல்லை.
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிதா கடந்த தேர்தலில், ரங்கசாமியை துரோகி என அடையாளம் காட்டியவர். இது ஊர் அறிந்த விஷயம். (வேண்டுமென்றால் ஜெயலலிதா பேசிய பேச்சை கேளுங்கள் என கடந்த தேர்தலில் ஜெயலலிதா புதுச்சேரியில் பேசிய ஆடியோவை நாராயணசாமி மைக்கில் போட்டு காட்டினார்).
பிரதமர் நரேந்திரமோடி, புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, ரங்கசாமி ஆகியோரின் பல தொல்லைகளை மீறி இந்த அரசு மக்கள் சேவை செய்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ரங்கசாமியும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமரானால், முதல் கையெழுத்து, புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்தாகத்தான் இருக்கும்.
புதுச்சேரி அரசின் கடன்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். புதுச்சேரியில் வெற்றி பெறும் வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும். எனவே வைத்திலிங்கத்தை மக்கள் வெற்றி பெறச்செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, காரைக்கால் பாரதியார் வீதியில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை வைத்திலிங்கம், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம் அறிமுக கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் சஞ்சய் தத், வேட்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர்கள் நாஜிம், ஏ.வி.சுப்பிரமணியன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி. நான் மத்தியில் மந்திரியாக இருந்தபோது, காரைக்காலுக்கு ரெயில் போக்குவரத்து, கேந்திரிய வித்யாலயா பள்ளி, என்.ஐ.டி. கல்வி நிறுவனம் என பல மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தேன். ஆனால் ரங்கசாமி அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை எதையும் கொண்டுவரவில்லை.காரைக்காலில் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். தற்போது காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நிற்கும் வைத்திலிங்கம் 8 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர். முதல்-அமைச்சர், அமைச்சர், சபாநாயகர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். மக்கள் சேவை என்றால் என்ன என்பதை நன்கு அறிந்தவர். ரங்கசாமி நிறுத்தியுள்ள வேட்பாளர், பணம் உள்ள ஒரு டாக்டர். அதை தவிர வேறு தகுதி அவருக்கு இல்லை.