சொத்து பிரச்சினையில் தகராறு 2 மகள்களுடன் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சி

சொத்து பிரச்சினை தகராறில் 2 மகள்களுடன் விஷம் குடித்து விவசாயி தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-28 22:15 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவருக்கும் அவரது உறவினரான பழனியப்பனுக்கும் (48) இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி குணசேகரன் வீட்டில் இருந்த போது, அவரை பழனியப்பன் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த குணசேகரன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் குணசேகரன் புகார் கொடுத்தார்.

3 பேர் விஷம் குடித்தனர்

இந்த நிலையில் நேற்று குணசேகரன் மற்றும் பழனியப்பனுக்கு இடையே உள்ள பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சிலர் குணசேகரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த குணசேகரன் மற்றும் அவரது 2 மாற்றுத்திறனாளி மகள்களும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் திடீரென விஷம் குடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து பிரச்சினையால் 3 பேர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்