ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள நம்பாக்கத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்கால்ஓடை பகுதியில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பெற்று நம்பாக்கத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக கல்கால்ஓடை பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றி விட்டது.
இதனால் டேங்கர் லாரி மூலமாக நம்பாக்கத்தில் 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடும்பத்துக்கு 5 குடங்கள் மட்டும் குடிநீர் வழங்கப்படுவதால் குளிக்க, துணிகள் துவைக்க தண்ணீரின்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையை போக்க பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் முயற்்சியால் சில நாட்களுக்கு முன்னர் புதிதாக 800 அடி ஆழத்தில் நம்பாக்கத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. நிலத்தடி நீர் வற்றி விட்டதால் புதிய ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வரவில்லை. மேலும் அடுத்த முயற்சியாக கம்மவார்பாளையம் கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கம்மவார்பாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய அழ்துளை கிணறு அமைக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.
இந்தநிலையில் நம்பாக்கத்தில் குடிநீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமானது. இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்கக்கோரியும் கிராம மக்கள் காலிகுடங்களுடன் நேற்று காலை பூண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்த பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க முயற்சி செய்வதாகவும்், கூடுதலாக டேங்கர் லாரிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
அதன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதன் காரணமாக பூண்டி- நம்பாக்கம் இடையே ¾ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.