மாமல்லபுரத்தில் தயாராகி அமெரிக்கா செல்லும் பஞ்சலோக சாமி சிலைகள்
அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலுக்கு தேவையான 26 பஞ்சலோக சாமி சிலைகள் மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
மாமல்லபுரம்,
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள லூயிஸ்வெல் என்ற இடத்தில் ஸ்ரீமாதா இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விழா நாட்களில் கோவிலின் பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்காக 26 பஞ்சலோக சிலைகள் வடிவமைக்க மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டன.
விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் விஷ்ணு, ராதாவுடன் கிருஷ்ணன், ராமன், லட்சுமணன், சீதை உள்ளிட்ட சுவாமிகளின் பஞ்சலோக சிலைகள் கடந்த 3 மாதமாக தேசிய விருது பெற்ற உலோக சிற்பக்கலைஞர் ஆர்.ரவீந்திரன் ஸ்தபதி தலைமையில் 12-க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் வடிவமைத்தனர். தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட பஞ்சலோக உலோகங்களை கொண்டு தத்ரூபமாக இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்போது முழுவதும் வடிவமைக்கப்பட்டு பளபளப்புடன் காட்சி அளிக்கும் இந்த பஞ்சலோக சிலைகள் விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட உள்ளன. அந்த கோவிலில் ஏப்ரல் 5-ந்தேதி பஞ்சலோக சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
வடக்கு கரோலினாவில் வாழும் தமிழர்கள் இந்த கோவிலை கட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் இந்து பண்டிகை தினங்களில் வந்து சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.