திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொது, செலவின, போலீஸ் மேற்பார்வையாளர்கள் நியமனம் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொது, செலவின, போலீஸ் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-28 22:45 GMT
திருவண்ணாமலை,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் போலீஸ் மேற்பார்வையாளர், செலவின மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் குறித்த புகார்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ள தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்.

பொது பார்வையாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டு உள்ள ரசீத்கான் என்பவரை 99373 40481 என்ற எண்ணிலும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டு உள்ள சாதிக்அலாம் என்பவரை 94371 15515 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

போலீஸ் மேற்பார்வையாள ராக திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு ராகுல் கடாகே என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை 99504 45566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செலவின மேற்பார்வையாள ராக திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு பத்மராம்மிர்தா என்பவரும், அனில்குமார் என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை 95304 00043, 94472 36200 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஆரணி நாடாளு மன்ற தொகுதிக்கு போஜி என்பவரும், ரகுவன்ஸ்குமார் என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை 98602 55118, 8160592365 என்ற எண்களில் தொடர்பு கொள்ள லாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள் ளார்.

மேலும் செய்திகள்