கணவரின் கள்ளக்காதலால் விபரீதம்: விஷம் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கணவரின் கள்ளக்காதலை கேள்விப்பட்ட பெண், தனது 2 குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு அதே விஷத்தை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-27 22:00 GMT
திருப்பத்தூர், 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சந்திரபுரம் கே.கே.கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், விவசாயி. இவருடைய மனைவி மேனகா (வயது 21). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யமுனா (3) என்ற மகளும், 7 மாதத்தில் கோவினேஷ் என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில், ஜெயகுமாருக்கும், அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. கணவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருப்பதை கேள்விப்பட்ட மேனகா, அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மேனகா, தனது இரு குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்று விட்டு அதே விஷத்தை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் விஷம் குடித்து இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதுபற்றி, கந்திலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி உதவி கலெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்