பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் 30-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-27 23:00 GMT
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 8.28, 9.30, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25, 10.45 ஆகிய நேரங்களிலும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று(வியாழக்கிழமை) ரத்துசெய்யப்படுகின்றன.

* செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் தாம்பரம் வரையிலும், 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர் வரையிலும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர் வரையிலும் மட்டுமே இயக்கப்படும்.

* சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55, 4.40, 5, 5.20 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில், அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில் ஆகியவை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* அதேபோல சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு காஞ்சீபுரம் நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில் மற்றும் செங்கல்பட்டு நோக்கி அதிகாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.

* கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே இரவு 9.40-க்கும், சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20-க்கும், அரக்கோணம்-வேளச்சேரி இடையே அதிகாலை 4, மாலை 4.15 மணிக்கும், ஆவடி-வேளச்சேரி இடையே காலை 8.15 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சிலைடிங்-வேளச்சேரி இடையே காலை 8.45 மணிக்கும், திருவள்ளூர்-வேளச்சேரி இடையே காலை 8.50, மாலை 5.55 மணிக்கும், சூலூர்ப்பேட்டை-வேளச்சேரி இடையே காலை 7.25 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி இடையே காலை 8.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே இரவு 9.40 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 30-ந்தேதி வரை மூர்மார்க்கெட் நோக்கி இயக்கப்படும்.

*தாம்பரத்தில் இருந்து பூங்கா நோக்கி இன்று(28-ந்தேதி) அதிகாலை 3.10, 3.35, 4, 4.20, 4.35, 5.15 ஆகிய நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

* ஆவடி-வேளச்சேரி காலை 4.10, 6.05, 7.10, 8.45 மணி, மதியம் 12.10, 2.40 மணி, மாலை 4.20, 5.50 மணிக்கும், ஆவடி-திருவள்ளூர் காலை 4.25 மணிக்கும், வேளச்சேரி-ஆவடி இரவு 8.25, 8.30, 9.50, 10.30 மணிக்கும், திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி, மதியம் 1.40 மணிக்கும், பொன்னேரி-வேளச்சேரி காலை 7 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி இரவு 8.20 மணிக்கும் புறப்படும் அனைத்து மின்சார ரெயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை-அரக்கோணம் காலை 5.10 மணிக்கும், கடற்கரை-திருவள்ளூர் காலை 6.20 மணிக்கும், வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 10, 10.55, 2.35 மணி, மாலை 6.10 மணிக்கும், வேளச்சேரி-திருவள்ளூர் மாலை 6.30 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருவள்ளூர்-வேளச்சேரி மாலை 6.20, 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-வேளச்சேரி இரவு 8.35 மணி, கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி மாலை 4.30 மணி, சூளுர்பேட்டை-வேளச்சேரி மாலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் பேசின் பிரிட்ஜ் வரை மட்டுமே இயக்கப்படும்.

* அரக்கோணம்-வேளச்சேரி காலை 6.55 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு ரெயில் சாதாரண ரெயிலாக இயக்கப்படும்.

* அரக்கோணம்-வேளச்சேரி காலை 7.40 மணிக்கு புறப்படும் அதிவேக மின்சார ரெயில் சாதாரண ரெயிலாக இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்