ராமநாதபுரம் அருகே தம்பியை கொலை செய்த மீனவர் கைது

ராமநாதபுரம் அருகே தம்பியை கொலை செய்த மீனவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-27 23:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி மொத்திவலசை கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம், நாகம்மாள் ஆகியோரது மகன்கள் சதீஷ் (வயது31), ரமேஷ்(29). இதில் சதீசிற்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் ரமேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் கட்டையால் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்